ஆன்மிகம்

கார்த்திகை வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்த ராஜராஜன்!

கார்த்திகை வழிபாட்டுக்கு ராஜராஜன் கொடுத்த முக்கியத்துவத்தை காளஹஸ்தி கல்வெட்டு கூறுகிறது. தமிழர்களின் நடுகல் மரபிலிருந்து வந்ததே சிவன் வழிபாடு. திருவண்ணாமலை கோயிலுக்கு நெடிய வரலாறு உண்டு; மகோன்னதப்படுத்தியவர்கள் சோழர்கள். திருவண்ணாமலைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்தவர்கள் சோழர்கள். 

இனத்துக்காகப் போரிட்டு மடிந்தவர்களுக்காக, மூத்தோருக்காக நடப்பட்ட வீரக்கற்களே நடுகற்கள். இனத்துக்காக உயிர்நீத்த வீரர்களைப் போற்றி மலர்சூடி வழிபடும் மரபிலிருந்து நீண்டதே லிங்க வழிபாடு. சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் என மூவேந்தர்களாலும் கொண்டாடப்பட்டவன் சிவன். 

சிந்து சமவெளி காலகட்டத்திலேயே சிவ வழிபாடு இருந்ததாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். இயற்கையே இறைவன் என வழிபடும் தமிழர்கள் மானுட அன்புக்கு கொடுத்த வடிவம் தான் சிவன். தமிழருக்கே உரிய தெய்வமாகக் கருதப்படும் சிவன் சங்கப் பாடல்களில் பல பெயரில் குறிக்கப்படுகிறான்.