ட்ரெண்டிங்

நவ.01- ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும்-சேலம் மாவட்ட ஆட்சியர் அறி

 

வரும் நவம்பர் 01- ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. அறிவித்துள்ளார்.

 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. கூறியதாவது,சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவம்பர் 01- ஆம் தேதி அன்று உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில், நவம்பர் 01- ஆம் நாளினை தமிழகத்தின் உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாகப் பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.

 

மேலும்,இணையவழி வீட்டு வரி, சொத்து வரி செலுத்துதுல், ஊராட்சியில் தற்போது நடைப்பெறும் அனைத்து பணிகள். கனவுப்பள்ளிகள், ஊரக விளையாட்டு மைதானம், சீமைக்கருவேல மரம் அகற்றுதல், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஊராட்சியின் சிறப்பு பிரச்சனைகள் அல்லது தேவைகள், கல்வி அறிவு, பெண் கல்வியறிவு சதவீதம், ஆண், பெண் குழந்தை பிறப்பு விகிதம், போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து விவாதித்தல், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் மற்றும் மேல்முறையீடுகள் குறித்து விவாதித்தல், பசுமை தமிழ்நாடு இயக்க திட்டம் குறித்து விவாதித்தல் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விபரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது.எனவே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.