ட்ரெண்டிங்

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ. ஆய்வகம்! 

உயர்கல்வித்துறையின் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் புதிய நவீன ஆய்வகங்களை அமைக்க ரூபாய் 12.38 கோடி நிதி ஒதுக்கி செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரனியல் தொழில்நுட்ப ஆய்வகங்கள், மாணாக்கர்களின் திறமைகளை வளர்ப்பதிலும், திறமையான மனிதவளத்தினை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கோயம்புத்தூர், சேலம் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரனியல் ஆய்வகம் அமைக்க தலா ரூபாய் 1,31,87,975 வீதம் மொத்தம் ரூபாய் 3,95,63,926 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம், மாணாக்கர்களுக்கு பலவிதமான பயிற்சி திட்டங்கள், பட்டறைகள் (Workshops) மற்றும் படிப்புகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.