ட்ரெண்டிங்

அதிரடி காட்டிய அதிகாரிகள்....50 கிலோ நெகிழி பொருட்கள் பறிமுதல்! 


தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழி பொருட்கள் (பிளாஸ்டிக்) உபயோகப்படுத்துவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நெகிழி பொருட்கள் (பிளாஸ்டிக்) பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 

இது அனைவருக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க, மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங்கின் உத்தரவின் பேரில் 4 மண்டலங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் அடிப்படையில், சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில்  மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் இன்று (நவ.27) நேரில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கன் (பிளாஸ்டிக்) விற்பனை செய்த வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு ரூபாய் 10,800 அபராதம் விதிக்கப்பட்டு 50 கிலோ நெகிழி பொருட்களைப் பறிமுதல் செய்தனர். 

மேலும் இது போன்று வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் (பிளாஸ்டிக்) பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.