தீபாவளி பண்டிகை நாளை (அக்.31) வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படவுள்ள நிலையில், புத்தாடைகளை வாங்குவதற்காக சேலம் கடைவீதிகள், முதல் அக்ரஹாரம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், 4 ரோடு, 5 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக, சேலம் கடைவீதிகளில் தீபாவளி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, சாலையோர துணிக்கடைகளில் வியாபாரம் நல்ல அளவில் இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மறுபுறம் பட்டாசுக் கடைகளிலும் விதவிதமான பட்டாசுகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.



-hcTFAGMRGb.jpg)