தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், சேலம் மாநகரில் உள்ள கடைவீதியில், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது.
அதேபோல், ஏழை, எளிய மக்கள், ஆதரவற்றவர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர்களுக்கு தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் புத்தாடைகள், இனிப்புகளை வழங்கி வர்கின்றனர்.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தி.மு .க.வின் சேலம் மத்திய மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன், கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று (அக்.30) நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டாசு கிஃப்ட் பாக்ஸ்கள், இனிப்புகளை நேரில் வழங்கி தீபாவளி திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். நிகழ்ச்சியில், தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


