ட்ரெண்டிங்

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு! 


சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (அக்.30) ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில், தேசத்தின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்கான நமது உறுதிபாட்டை நாம் அனைவரும் வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 31- ஆம் நாள் தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமான நாளை அரசு விடுமுறை என்பதால் இன்றைய தினம் தேசிய ஒற்றுமை நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

உறுதிமொழி மாவட்ட மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை வாசிக்க, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜன் உட்பட தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.