மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (அக்.28) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் முகாம் இன்றையதினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதற்கட்டமாக 28 நபருக்கு வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறாதவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இத்தகைய தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதற்கான சிறப்பு முகாம்கள் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெறுகிறது. அந்தவகையில் வருகின்ற நவ.05- ஆம் தேதி அன்று மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நவ.06- ஆம் தேதி அன்று கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், அயோத்தியாப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும், நவ.07- ஆம் தேதி அன்று காடையாம்பட்டி ஒன்றியத்திற்கு தீவட்டிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், நவ.08- ஆம் தேதி அன்று ஏற்காடு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நவ.12- ஆம் தேதி அன்று தலைவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நவ.13- ஆம் தேதி அன்று மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பனமரத்துப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
அதேபோன்று, நவ.14- ஆம் தேதி அன்று வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்
பள்ளியிலும், நவ.15- ஆம் தேதி அன்று நங்கவள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நவ.19- ஆம் தேதி அன்று பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நவ.20- ஆம் தேதி அன்று தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நவ.21- ஆம் தேதி அன்று ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
மேலும், நவ.22- ஆம் தேதி அன்று எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நவ.26- ஆம் தேதி அன்று கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நவ.27- ஆம் தேதி அன்று சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மணியனூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும், நவ.28- ஆம் தேதி அன்று கொளத்தூர் ஒன்றியத்திற்கு மேட்டூர் அணை அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,நவ.29- ஆம் தேதி அன்று ஓமலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சேலம் ஒன்றியத்திற்கு சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இம்முகாம் நடைபெறும் இடங்களுக்கு நேரடியாக மருத்துவர்கள் வருகைபுரிந்து உரிய சான்றுகள் வழங்கி அடையாள அட்டையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இம்முகாம்களில் கலந்துகொள்ளும் பயனாளிகள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 4 புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இம்முகாமினைப் பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியின் அருகாமையிலேயே மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையினை பெற்றுப் பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இம்முகாமில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.தேவி மீனாள், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் இராஜ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


-SXgDfGgJfO.jpg)