ட்ரெண்டிங்

பருவ மழை முன்னேற்பாடுகள் பணிகள் ஆலோசனைக் கூட்டம் !!!

 

சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் துணை முதலமைச்சரின் கூடுதல் செயலாளர் ஆர்த்தி,தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி, முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்திற்குப்பின் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது:-

 

தமிழ்நாடு அரசால் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகளைக் கண்காணித்து உரிய ஆலோசனை வழங்கிடாவும்.மேலும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை சிறந்த முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்திடும் வகையிலும் தமிழ்நாடு அரசால் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு,தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர். 

 

அந்தவகையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் இன்றையதினம் நடத்தப்பட்டது. குறிப்பாக துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்தகால நிகழ்வுகளை வைத்து பருவமழையினால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்கள் குறித்தும் அவ்விடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பருவமழையினால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கென துணை ஆட்சியர் அளவில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு,பொதுமக்களை பேரிடர் போது தங்கவைக்க பாதுகாப்பு மையங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும். நிவாரண முகாம்களில் போதுமான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் உள்ளதை கண்காணிப்பு அலுவலர்கள் உறுதிப்படுத்திட பொறுப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

 

அதேபோன்று சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ.மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் அறை எண்.120 இல் செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 0427-2452202 என்ற தொலைபேசி எண்ணிலே 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மாவட்டம் முழுவதும் சிறப்பு பட்டா வழங்கும் திட்டத்தின்கீழ் பட்டா வழங்கப்பட்டுள்ளது குறித்தும். மேலும், நிலுவையில் உள்ள பட்டா குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி,ஊரக வளர்ச்சித்துறை,பேரூராட்சிகள் துறை, நகராட்சிகள் துறை நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் சாலைகளின் நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று தற்பொழுது நடைபெற்று வரும் சாலைப்பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான தாயுமானவர் திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 109.792 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் அவரவர் வீடுகளுக்கே சென்று பொது விநியோக திட்டப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்றிடவும், அரசின் திட்டங்களை விரைவாக செயல்படுத்தி பொதுமக்களிடம் கொண்டு சேர்த்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சரின் கூடுதல் செயலாளர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

 

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் திருமா.இளங்கோவன் மாவட்ட வருவாய் அலுவலர் திருஇராரவிக்குமார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி ஷாலினி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி வாணி ஈஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.