ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி இன்று (அக்.28) சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு அக்.28 முதல் நவ.03 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி வாசிக்க, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மயில் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


