சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சேலம் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து இன்று (அக்.26) நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 173 முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இம்முகாமில் பங்கேற்ற 4,534 நபர்களில், 500 -க்கும் மேற்பட்ட நபர்கள் தேர்வுச் செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திரன், இவ்வேலைவாய்ப்பு முகாமில் பணிக்கான ஆணைகளைப் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், இம்முகாமில் கலந்து கொண்டுள்ள நிறுவனங்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொண்டு பணி நியமன ஆணைபெற்றவர்கள் இதோடு நின்றுவிடாமல் மேலும் வெற்றியடைய வேண்டுமாய் கேட்டுக் கொண்டேன்.
இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப., சேலம் எம்.பி. டி.எம். செல்வகணபதி, வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


