சேலம் மாவட்டம், வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும் கால்நடை சந்தை மாவட்டத்திலேயே மிகப்பெரிய சந்தையாகும். இச்சந்தைக்கு சேலம் மாவட்டமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், மேச்சேரி இனஆடுகள், மாடுகள் உள்ளிட்ட பல்வேறு இனஆடுகள் விற்பனைக்காகக் கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், வரும் அக்.31- ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், வீரகனூரில் இன்று (அக்.26) நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஆடுகளை விற்பனை செய்வதற்காக ஏராளமான விவசாயிகள் சுமார் 2,000- க்கும் மேற்பட்ட ஆடுகளை கொண்டு வந்தார். இந்த ஆடுகளை வாங்குவதற்காக ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், சேலம், தம்மம்பட்டி உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த நுற்றுக்கணக்கான் வியாபாரிகள் மற்றும் இறைச்சி கடைக்காரர்களும் தீபாவளிக்காக ஆட்டுக்கறி வழங்கும் சீட்டுக்களை நடத்துபவர்கள் என ஏராளமானோர் வருவார்கள். தற்போது தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் விவசாயிகள் கொண்டு வந்த ஆடுகளை வியாபாரிகளும், பொதுமக்களும், வாங்குவதற்கு குறைந்த அளவிலே வந்ததால் சந்தை களையிழந்தது.
விறு விறுப்பாக நடக்கும் வீரகனூர் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் தரத்திற்கேற்றவாறு உயிருடன் ஒரு கிலோ எடையின் மதிப்பளவில் 380 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை என ஒரு ஆட்டிற்கு 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை விலை வீழ்ச்சியடைந்து விற்பனையானதால் ஆடுகள் சுமார் 1 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது, வழக்கமாக, வீரகனூர் ஆட்டு சந்தைக்கு கறிக்கடை வியாபாரிகள் அதிகளவில் வருவார்கள். ஆனால் தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்களே உள்ளதால் ஆடுகளை வாங்கிச் சென்றால் எடை குறைந்து நஷ்டம் ஏற்படும் என்பதால் கிராமப்புறங்களில் தீபாவளி சீட்டு நடத்தி ஆடுகளை விலைக்கு வாங்கி அவற்றை அறுத்துக்கறி பங்கு போட்டு கொடுப்பவர்களும் குறைந்தளவில் சந்தையில் கூடியதால் வீரகனூர் ஆட்டுச்சந்தை இன்று களையிழந்து காணப்பட்டது. எனவே விவசாயிகளின் நலன் கருதி வருகின்ற புதன்கிழமை சிறப்பு ஆட்டுச்சந்தை கூடும் என பேரூராட்சி நிர்வாகம் தண்டோரா மூலம் தெரிவித்துள்ளனர்,


-SXgDfGgJfO.jpg)