சேலம் மாவட்டம், நரசோதிப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் நேற்று (அக்.24)
Recycle Ramp Walk என்ற நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.
Ramp Walk என்பது ஒரு மகிழ்ச்சியான,வேடிக்கையான ஒரு போட்டியாகும். இதில் பழைய செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் போன்றவற்றில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் மற்றும் ஆபரணங்களை உருவாக்கி, தன்னை அழகுபடுத்திக்கொள்ள குழந்தைகளை ஊக்குவிக்கிற போட்டியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்த செயல்பாடு சிறு குழந்தைகள் இடையே மறுசுழற்சி முறையைப் பின்பற்றவும், படைப்பாற்றல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிகழ்ச்சியில், ஸ்ரீ சைதன்யா பள்ளியின் தமிழ்நாடு தலைமை அதிகாரி ஹரிபாபு, பள்ளியின் துணைப் பொதுமேலாளர் வெங்கடகிருஷ்ணா ரெட்டி, பள்ளியின் முதல்வர் மாலதிராஜா, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


-SXgDfGgJfO.jpg)