ட்ரெண்டிங்

சேலம் வழியாக மங்களூருவுக்கு தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டும் சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம் வழியாக மங்களூருவுக்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

 

அதன்படி, வரும் நவ.02- ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருவுக்கும் (ரயில் எண் 06037), நவ.03-ம் தேதி மங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் (ரயில் எண் 06038) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சோரனூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு என்ற https://www.irctc.co.in/nget/train-search இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.