ட்ரெண்டிங்

வரலாறு காணாத புதிய உச்சத்தில் முட்டை விலை!

வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது முட்டை விலை.

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு பண்டிகையையொட்டி, கேக்குகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கேக் தயாரிப்பிற்கு முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது முட்டை. தற்போது கோழி முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால், அதன் விலை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து, ரூபாய் 5.70 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 08- ஆம் தேதி முட்டை விலை ரூபாய் 5.65 ஆக இருந்த நிலையில், தற்போது உச்சபட்ச விலையாக ரூபாய் 5.70 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் முட்டைகளின் தேவை அதிகரித்ததும், விலை உயர்வுக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. எனினும், வரும் நாட்களின் முட்டை விலை மேலும் உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.