சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.23) காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் ஆவின் பால் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள், கார வகைகளின் தீபாவளி பண்டிகைக்கான விற்பனையைத் தொடங்கி வைத்தார். அத்துடன், இனிப்புகளையும் சுவைத்து பார்த்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, ஆவின் பால் நிறுவனத்தின் பொதுமேலாளர் குமரேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு ஆவின் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 37 டன் அளவிலான இனிப்பு மற்றும் கார வகைகள் சுமார் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 40 டன் அளவிலான இனிப்பு மற்றும் கார் வகைகள் விற்பனை செய்ய இலக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், பொதுமக்கள் அனைவரும் ஆவின் நிறுவன பொருட்களை வாங்கிட வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.


-SXgDfGgJfO.jpg)