சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் இன்று (அக்.22) காலை 10.00 மணிக்கு அ.தி.மு.க.வின் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளார். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல் தான் உண்மையான தேர்தல், பைனல் மேட்ச்; அதில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். தி.மு.க. விளையாட்டை ஆரம்பித்துவிட்டீர்கள்; அந்த விளையாட்டுக்கான கோப்பையை அ.தி.மு.க. தான் வெல்லும்.
உதயநிதியின் வயதை விட என் அரசியல் அனுபவம் அதிகம்; 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கேன்; உதயநிதிக்கு 46 வயது தான் ஆகிறது; நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். அனுபவத்தால், உழைப்பால் தனக்கு பதவி கிடைத்துள்ளது. தி.மு.க. கூட்டணியை மட்டும் நம்பி உள்ளது; கூட்டணி தலைவர்கள் கைவிட்டால் தி.மு.க. விழுந்துவிடும். தி.மு.க. ஆட்சிக்கு வந்து மக்களுக்கு என்ன செய்தது?, சேலம் மாவட்டத்தில் ரூபாய் 1,000 கோடி செலவில் அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட கால்நடை பூங்கா இன்றும் திறக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.


