ட்ரெண்டிங்

மாட்டுச்சந்தையில் எருமை மாடுகள், எருமைக்கன்றுகளின் விற்பனை அதிகரிப்பு! 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே மாட்டுச்சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

பெருமாள்கோவில் கிராமத்தில் கூடிய மாட்டுச்சந்தையில் சுமார் 5,000 கால்நடைகள் விற்பனைக்கு வந்தனர். கறவை மாடுகள் 40,000 ரூபாயில் இருந்து 75,000 ரூபாய் வரை விற்பனையாகின. அதேபோல், காளைகள் 50,000 ரூபாயில் இருந்து 1 லட்சம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. 

கோயில்களில் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக எருமைகளையும், எருமைக்கன்றுகளையும் கோயிலுக்கு நேர்ந்து விடுவார்கள். இதன் காரணமாக, இன்று கூடிய சந்தையில் எருமைகள் மற்றும் எருமைக்கன்றுகள் அதிகமாக விற்பனைக்கு எடுத்து வரப்பட்டன. 

எருமை மாடுகள் மற்றும் எருமைக்கன்றுகள் அதிகமாக விற்பனைக்கு அழைத்து வரப்பட்டிருந்தன. அதன் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. கறவை மாடுகள், காளைக்கன்றுகள், இறைச்சி மாடுகள் என சுமார் ரூபாய் 4 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.