சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நவீன மருத்துவத்தின் முன்னோடியாக திகழும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் வரும் அக்.23- ஆம் தேதி அன்று 37- ம் ஆண்டு துவக்க விழா நடைபெற உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனர் டாக்டர்.அர்த்தநாரி கூறியதாவது, சேலம் மற்றும் சுற்றியுள்ள மாவட்ட மக்கள் உயர் சிகிச்சைக்காக பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்த போது, அவர்களின் மருத்துவத் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் 1988- ம் ஆண்டு ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது.
அந்த காலகட்டத்தில் சேலத்தில் முதன்முறையாக சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், அதிநவீன அவசர ஊர்தி சேவை போன்றவற்றை அறிமுகப்படுத்தி படிப்படியாக உறுப்பு மாற்று சிகிச்சைகள், இருதய அறுவை சிகிச்சைகள், கேத் லேப் வசதிகள், அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவுகள், தேசிய தரச்சான்று பெற்ற ஆய்வகம், இரத்த வங்கி என பல்வேறு நவீன மருத்துவ வசதிகளுடன் சிறந்த பல்நோக்கு மருத்துவமனையாக திகழ்கின்றது.மேலும் கடினமான இரத்த குழாய் அடைப்பு நீக்கும் சிகிச்சைகள், சிறு துளை இருதய அறுவை சிகிச்சைகள், மைக்ராஸ்கோப் மூலம் செய்யப்படும் தண்டுவட அறுவை சிகிச்சைகள் மற்றும் ECMO, IABP வசதிகளுடன் கூடிய அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவுகள் போன்றவை எங்களது மருத்துவமனையில் பெரிய நகரங்களுக்கு இணையாக உள்ளன.
உயர் மருத்துவ படிப்புகள், செவிலியர் படிப்புகள் மற்றும் பாராமெடிக்கல் படிப்புகள் ஆகியவையும் இங்கு சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்படுகின்றன. வருகின்ற அக்.23- ஆம் தேதி அன்று 36ஆண்டுகள் பூர்த்தியாகி 37- ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் ஆண்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் ரோட்டரி கவர்னர் சிவகுமார் அவர்கள் தலைமை விருந்தினராகவும், ஜி.டி.பி.குழுமங்களின் தலைவர் முத்துராஜன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ள இசைந்துள்ளார்கள். அது சமயம் அனைவரும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)