சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) கலந்து கொள்ள பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்ததாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) தேர்ச்சி பெற பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 65 சதவீதமும் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 75 சதவீதமும் மதிப்பெண் பெற்றியிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூபாய் 4 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சியானது மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி பயிலவும் உணவு மற்றும் தங்கும் இடத்திற்குக்கான கட்டணத் தொகையும் 11 மாதங்களுக்கு தங்கி பயில பயிற்சிக்கான தொகையினை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.
குறிப்பாக, கடந்த ஆண்டில் 30 மாணவர்கள் தங்கிப் பயின்று அதில் 26 மாணவர்கள் தேர்ச்சி பெற்று IIT, NIT போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேர தகுதி பெற்றுவுள்ளார்கள். மேலும் இப்பயிற்சி பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட தாட்கோ மேலாளரை 94450- 29473, 0427- 2280348 என்ற எண்களின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



