ட்ரெண்டிங்

கவர்ந்த கிளிமூக்கு விசிறிவால் சேவல்கள்....பரிசுகளை வென்ற உரிமையாளர்கள்! 

சேலம் கிங்ஸ் அசீல் ஆர்கனைஷேசன் சார்பில் முதலாம் ஆண்டாக கிளிமூக்கு விசிறிவால் சேவல் கோழிகள் கண்காட்சி பனமரத்துப்பட்டி பிரிவு சாலையில் உள்ள ஸ்ரீ விஜய மஹால் திருமண மண்டபத்தில் நேற்று (அக்.20) காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெற்றது.

கண்காட்சியில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சேவல் கோழிகளை வளர்ப்போர் தங்களது கோழிகளுடன் கண்காட்சியில் கலந்து கொண்டு வித விதமான சேவல்களைக் காட்சிப்படுத்தினர். 

பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்த 3 சேவல்கள் தேர்வுச் செய்யப்பட்டு தலா 5 கிராம் தங்கம் முதல் பரிசாக வழங்கப்பட்டது.இரண்டாம் பரிசாக 5 சேவல்களுக்கு பிரிட்ஜ் வழங்கப்பட்டது.  மூன்றாம் பரிசாக 10 சேவல்களுக்கு வாஷிங் மெஷினும், 4- ம் பரிசாக 50 சேவல்களுக்கு மிக்ஷியும் வழங்கப்பட்டன. 

சிறந்த வால்சேவல்களுக்கான பரிசு 12 சேவல்களுக்கு வழங்கப்பட்டன. மொத்தமாக 80 சேவல்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.