பாரிஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் தொடரின் உயரம் தாண்டுதல் பிரிவில் சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். தொடர்ந்து, மூன்று பாரா ஒலிம்பிக் தொடரில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாரியப்பனுக்கு மத்திய அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், பாரிஸ் நகரில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டின் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ள தாங்கள், மேலும் பல சிகரங்களைத் தொட்டு நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

-Mirh7Moide.jpeg )
