ட்ரெண்டிங்

மூக்கனேரியில் அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு! 

சேலம், கன்னங்குறிச்சி மூக்கனேரியில் மாநகராட்சி சார்பில் ரூபாய் 23 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைத்து அழகுபடுத்தும் பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று (அக்.16) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மூக்கனேரி புனரமைப்புப் பணிகள் மூலம் கனமழையின் போது சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

ஆய்வின் போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சுற்றுலா ஆணையர்/ தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சமயமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) லலித் ஆதித்ய நீலம், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.