சேலம் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 15) காலை 09.30 மணிக்கு நடைபெற்ற 77-வது சுதந்திர தின விழாவில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதைச் செலுத்தினார். அதைத் தொடர்ந்து, அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.
பின்னர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஏற்றுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக, சிறப்பாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தை வழங்கிப் பாராட்டினார்.
இந்த விழாவில், மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாநகராட்சி உதவி ஆணையாளர் அசோக்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


-SXgDfGgJfO.jpg)