ட்ரெண்டிங்

முதலமைச்சர் கிராம சாலை திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை!

முதலமைச்சர் கிராம சாலைத் திட்டத்தின் கீழ் ரூபாய் 3.46 கோடி மதிப்பீட்டில் சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 7 ஊராட்சிக்களுக்கு சாலை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், பணிகளைத் தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், சேலம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ரெயின்போ நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் சேலத்தாம்பட்டி ராஜேந்திரன், சேலம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ரா.மலர்கொடி ராஜா, தளவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கே.ராஜா, மாவட்ட கவுன்சிலர் கீதா குணசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.