ட்ரெண்டிங்

வ.உ.சி. மார்க்கெட்டில் பூக்களின் விலை நிலவரம்! 


சேலம் தேர்வீதியில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்று (ஜூலை 06) பூக்களின் விலை நிலவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். அதன்படி, மல்லி கிலோ 400 ரூபாய்க்கும், முல்லை கிலோ 260 ரூபாய்க்கும், ஜாதிமல்லி கிலோ 320 ரூபாய்க்கும், காக்கட்டான் கிலோ 240 ரூபாய்க்கும், கலர் காக்கட்டான் கிலோ 160 ரூபாய்க்கும், மலைக்காக்காட்டான் கிலோ 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

அதேபோல், அரளி கிலோ 80 ரூபாய்க்கும், வெள்ளை அரளி கிலோ 90 ரூபாய்க்கும், மஞ்சள் அரளி கிலோ 90 ரூபாய்க்கும், செவ்வரளி கிலோ 120 ரூபாய்க்கும், ஐ.செவ்வரளி கிலோ 90 ரூபாய்க்கும், நந்தியாவட்டம் கிலோ 40 ரூபாய்க்கும், சி.நந்தியாவட்டம் கிலோ 80 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 50 ரூபாய்க்கும், சாதா சம்பங்கி கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.