ட்ரெண்டிங்

சேலம் வழியாக எலஹங்காவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு! 

சேலம் வழியாக எலஹங்காவுக்கு வாராந்திர சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று (மே 22) முதல் ஜூன் 12- ஆம் தேதி வரை நெல்லையில் இருந்து எலஹங்காவுக்கும்,  எலஹங்காவில் இருந்து நெல்லைக்கும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், பங்காராபெட், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். 

இந்த வாராந்திர சிறப்பு ரயிலுக்காக பயண டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.