ட்ரெண்டிங்

GOAT திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி! 

நடிகர் விஜய்யின் GOAT திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை ஒருநாள் மட்டும் காலை 09.00 மணி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. செப்.05- ஆம் தேதி காலை 09.00 மணி சிறப்பு காட்சி உட்பட 5 காட்சிகளைத் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

செப்.05, 06 ஆகிய தேதிகளில் சிறப்பு காட்சிகளுக்கு கோரிக்கை வைத்த நிலையில், ஒரு நாளுக்கு மட்டுமே சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை திரையிடும் கடைசி காட்சியை நள்ளிரவு 02.00 மணிக்குள் முடிக்க வேண்டுமெனவும் தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது. 

வெங்கட் பிரபு இயக்கியுள்ள விஜய்யின் The Greatest of All Time படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டுமே சுமார் 950 திரையரங்குகளில் அப்படம் வெளியாகவுள்ளது.