சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், வெள்ளைக்குட்டை பகுதியில் செயல்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப. முன்னிலையில் இன்று (செப்.04) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாநகர பகுதிகளில் தினசரி சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரித்திடும் வகையில் பாதாள சாக்கடை திட்டம் மூலம் 2008-ல் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், வெள்ளைக்குட்டை பகுதியில் 13 MLD திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாள்தோறும் 8 MLD கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு முறையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்பொது திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் கலப்பதாக வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் இன்றைய தினம் இச்சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. நேரில் ஆய்வு மேற்கொண்டார். சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள கழிவுநீர் உள்வரும் வழி, சுத்திகரிப்பு நடைபெறும் இடம், காற்றோட்டம் நடைபெறும் இடம், நீரினை தெளிவுப்படுத்தும் இடம், திடக்கழிவுகள் சேகரமாகும் இடம், தெளிந்த சுத்திகரிப்பட்ட நீர் செல்லும் பாதை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும்
பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாநகராட்சி பகுதிகளின் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப கழிவுநீரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சுத்திகரித்து வெளியேற்றும் நடவடிக்கையினை மேம்படுத்திடவும், சுத்திகரிப்பட்ட நீரை
எவ்வித தடையுமின்றி எளிதாக வெளியேற்றும் வகையிலும், தேவையான நீர் வழிப்பாதைகளை தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டுமெனவும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சுத்திகரிப்பு நிலையத்தினை முறையாக இயங்கிடவும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முழுவதும் தேவைப்படும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவுறுத்தினார்.

-nZO0m9QP0j.jpeg )

-hcTFAGMRGb.jpg)