ட்ரெண்டிங்

சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு!


சேலம் வழியாக எர்ணாகுளத்தில் இருந்து எலகங்காவுக்கும், கர்நாடகா மாநிலத்தின் எலகங்காவில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. செப்.04, 06 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து எலகங்காவுக்கும், செப்.05, 07 ஆகிய தேதிகளில் எலகங்காவில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. 

சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது.