ட்ரெண்டிங்

சேலத்தில் இடியுடன் கூடிய கனமழை! 

சேலம் மாநகர பகுதிகளான அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை, பட்டைக்கோவில், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், வின்சென்ட், கன்னங்குறிச்சி, 5 ரோடு, சாரதா கல்லூரி சாலை, கோரிமேடு, அழகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

குறிப்பாக, காற்றுடனும், இடி மின்னலுடனும் கனமழை பெய்து வருகிறது. மாநகரம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதனிடையே, தமிழகத்தில் இரவு 07.00 மணி வரை திருவள்ளூர், நீலகிரி, கோவை, வேலூர், தென்காசி, திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.