ட்ரெண்டிங்

வானிலை மாற்றங்களைத் துல்லியமாகக் கணிக்க நடவடிக்கை! 

வானிலை மாற்றங்களைத் துல்லியமாகக் கணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன், தமிழகத்தில் நிலவும் வானிலை மாற்றங்களைத் துல்லியமாகக் கணிக்கக் கூடுதலாக 2 ரேடார்கள் அமைக்கப்படுகிறது. ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை ரேடார்கள் விரைவில் அமைக்கப்படும். ஏற்கனவே, சென்னையில் 2 ரேடார்களும், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு ரேடாரும் உள்ளன. 

தென் மாவட்டங்களுக்கான வானிலைத் தரவுகளைத் திரட்டி முன்னெச்சரிக்கை வழங்க ராமநாதபுரம் ரேடார் உதவியாக இருக்கும். ஏற்காடு ரேடார் இதுவரை அதிக கண்காணிப்பு இல்லாத உள் மாவட்டங்களுக்கான தரவுகளைப் பெற உதவும் எனத் தெரிவித்துள்ளார்.