சேலம் இரும்பாலையில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் 29- வது பட்டமளிப்பு விழா இன்று (ஆகஸ்ட் 30) மாலை 04.00 மணிக்கு நடைபெற்றது.
மருத்துவக் கல்லூரியின் டீன் (பொ) மணிகாந்தன் தலைமையிலும், மருத்துவக் கண்காணிப்பாளர் ராஜ்குமார் முன்னிலையிலும் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், 2018- 2019- ம் கல்வியாண்டில் படித்து முடித்த 100 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களுடன் கூடிய பட்டங்களை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
விழாவில், சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி, சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம் மற்றும் மருத்துவக் கல்லூரியின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


