சேலம் வழியாகச் செல்லும் மதுரை- பெங்களூரு இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆகஸ்ட் 31) காணொளி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆகஸ்ட் 31) காணொளி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார். சென்னை எழும்பூர்- நாகர்கோவில், மதுரை- பெங்களூரு ஆகிய வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்படவுள்ளது.
எழும்பூர்- நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக இயக்கப்படவுள்ளது. மதுரை- பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
இந்த புதிய வந்தே பாரத் ரயில் சேவை, செப்.02- ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



-hcTFAGMRGb.jpg)