சேலம் மாவட்டம், வாழப்பாடியில் உள்ள தி.மு.க.வின் மாவட்ட தலைமை அலுவலகமான தளபதி அறிவாலயத்தில் இன்று (ஆகஸ்ட் 28) காலை 10.00 மணிக்கு தி.மு.க.வின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி எம்.பி., துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பேசிய அமைச்சர் கே.என்.நேரு, திமுக இளைஞர் அணி மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு காரணம் சேலம் மாவட்ட திமுகவினரின் உழைப்பு தான்..! தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்ததைப் போன்று வரும் 2026- ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற தீவிரமாகப் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

-Lol8oWXTyN.jpg )

-SXgDfGgJfO.jpg)