கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, RINAYA MEDIA WORK's மற்றும் JUST NOW SALEM நடத்திய சேலத்து கிருஷ்ணர்கள் 3.0 நிகழ்ச்சி சேலத்தில் நேற்று (ஆகஸ்ட் 26) மாலை 05.00 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, நிகழ்ச்சியில் கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகள், மேடையில் அணிவகுத்துச் சென்றது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. சிறந்த கிருஷ்ணர், ராதை தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், திரைப்பட நடிகர் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த கிருஷ்ணர், ராதைகளுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினர். இதனிடையே, STEP UP குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.



-hcTFAGMRGb.jpg)