ட்ரெண்டிங்

அமைச்சரவை மாற்றமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்! 

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கு தகவல் வரவில்லை; நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசின் விழா. 

அதை மாநில அரசு நடத்தியது. தமிழகம் முழுவதும் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு உதவி வழங்க மாநில பேரிடர் மையம் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார். 

வரும் ஆகஸ்ட் 27- ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் மாற்றம் செய்யவிருப்பதாகவும், புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.