ட்ரெண்டிங்

ஓமலூரில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை குறைவு!

சேலம் மாவட்டம், ஓமலூர் ஆட்டுச்சந்தையில் இன்று (டிச.23) ஆடுகள் விற்பனை குறைந்துக் காணப்பட்டது.
ஐயப்பன் மற்றும் பெருமாளுக்கு விரதம் இருந்த மக்கள், இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்த்ததே ஆடுகள் விற்பனைக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், பொங்கல் பண்டிகையைக் கருத்தில் வெள்ளாடு, செம்மறி ஆட்டுக்குட்டிகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவு வாங்கிச் சென்றனர். இன்று கூடிய வாராந்திர ஆட்டுச்சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு பண்டிகை நெருங்கும் நிலையில், வரும் நாட்களில் ஆடுகளின் விற்பனை அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.