ட்ரெண்டிங்

சேலம் வழியாக வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! 

எர்ணாகுளம்- பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 25 வரை எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு கண்டோன்மென்ட்டுக்கும், மறுமார்க்கத்தில், ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 26 வரை பெங்களூரு கண்டோன்ட்மென்ட்டில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. வந்தே பாரத் சிறப்பு ரயில் ஈரோடு, சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். 

வாரத்தில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் எர்ணாகுளத்தில் இருந்து  பெங்களூரு கண்டோன்மென்ட்டுக்கும், வியாழன்கிழமை, சனிக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய நாட்களில் பெங்களூரு கண்டோன்மென்ட்டில் இருந்து எர்ணாகுளத்திற்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. 

இந்த வந்தே பாரத் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.