ட்ரெண்டிங்

கோட்டை மாரியம்மன் தேரோட்டம்- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 

கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலின் தேரோட்டத்தையொட்டி, அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். 

சேலத்தில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலின் ஆடித் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சியில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரி, மேட்டூர் திருத்தொண்டர்கள் அறக்கட்டளை நிறுவனர் ராராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

அந்த மனுவில், ஆடி மாதம் நடைபெறும் ஆடிப் பெருவிழா தேரோட்டத்தில் சுமார் 6 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், தேரோட்ட விழா சிறப்பாகவும், அமைதியாகவும் நடைபெற உரிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவின் தேரோட்ட நிகழ்ச்சியில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதியைச் செய்துத் தரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவிக்கு உத்தரவிட்டுள்ளது.