ட்ரெண்டிங்

சேலத்தில் எருதாட்டம் விறுவிறு! 

சேலத்தில் முனியப்பன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, எருதாட்டம் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மூங்கில் முத்து முனியப்பன் திருக்கோயில். இந்த கோயிலில், ஆடி மாத திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முனியப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் நெய்க்காரப்பட்டி மட்டுமின்றி சேலம் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோயிலில் குவிந்துள்ளனர். 

திருவிழாவின் முக்கிய நிகழ்வான எருதாட்டம், கோயில் மைதானத்தில் இன்று (ஜூலை 18) மாலை 04.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எருதாட்டத்தை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். 

பாதுகாப்பு பணியில் 100- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.