ட்ரெண்டிங்

மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்! 

தமிழகத்தில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, ஜவுளித்துறை ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இயக்குநராக மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை இயக்குநராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகா நியமிக்கப்பட்டுள்ளார். மீன்வளத்துறை மேலாண் இயக்குநராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கெஜலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநராக மோகன் சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாக அதிகாரியாக கற்பகம் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட இயக்குநராக மெர்சி ரம்யா நியமிக்கப்பட்டுள்ளார். 

போக்குவரத்துத்துறை ஆணையராக சுன்சாங்கம் ஜடக் சிரு நியமிக்கப்பட்டுள்ளார். தொழிற்கல்வித்துறை ஆணையராக டி.ஆபிரகாம் நியமிக்கப்பட்டுள்ளார்.