தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தொடங்கி நடைபெற்றது.
துணை ஆட்சியர், துணைக் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 90 காலிப் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலைத் தேர்வு இன்று (ஜூலை 13) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல்நிலைத் தேர்வு காலை 09.30 மணிக்கு தொடங்கிய நிலையில், பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது. மாநிலம் முழுவதும் முதல்நிலைத் தேர்வை 2.38 லட்சம் பேர் தேர்வை எழுதி வருகின்றனர். சென்னையில் 124 தேர்வு மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 797 மையங்களில் தேர்வு நடக்கிறது.
மொத்தம் 200 மதிப்பெண்களுக்கான வினாத்தாளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.
சேலம் மாவட்டத்தில் 37 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 47 தோ்வு கூடங்களில் இன்று (ஜூலை 13) காலை 09.30 மணிக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு தொடங்கியது. மாவட்டத்தில் சுமார் 13,469 போ் தேர்வை எழுதுகின்றனர். தோ்வினைக் கண்காணிப்பதற்காக 4 பறக்கும் படைகளும், 12 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.


