ஓமலூர் வட்டாரத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்களின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலை விபத்துகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, அதிகமாக பாரம் ஏற்றிச் சென்றது உள்ளிட்டவைக்களுக்காக அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஓமலூர் உட்கோட்ட சரகத்தில் உட்பட்ட பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறியதாக சுமார் 20 பேரின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளனர்.


-SXgDfGgJfO.jpg)