ட்ரெண்டிங்

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்துப் பணம் கிடைக்கவில்லையா?- அமைச்சர் கே.என்.நேருவின் அறி

தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு டெபிட் கார்டு வழங்கும் விழா சேலம் மாவட்டம், அழகாபுரத்தில் உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சமுதாயக் கூடத்தில் இன்று (செப்.27) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

விழாவில், 500 மகளிருக்கு டெபிட் கார்டுகளை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் பேசிய தமிழக நகர்புறத்துறை அமைச்சர் கே.என்.நேரு,மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்து பணம் கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.

முதலமைச்சருக்கு நிறைய பணிகள் உள்ள நிலையில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அரசு மற்றும் கட்சி நிர்வாகத்தை திறம்பட வழிநடத்தி வருகிறார். முதலமைச்சராக கலைஞர் இருந்தபோது மு.க. ஸ்டாலின செயல்பட்டது போல, தற்போது முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கும்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறம்பட செயலாற்றி வருகிறார். அவருக்கு எப்போதும் உற்ற துணையாக இருப்போம்" எனத் தெரிவித்தார்.

இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.