ட்ரெண்டிங்

சமூக விரோதிகளுக்கு எச்சரிக்கை....முதல் நாளிலே மாஸ் காட்டிய காவல் ஆணையாளர்! 

சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆணையாளர் பிரவீன்குமார் அபிநவ் எச்சரித்துள்ளார்.

சேலம் மாநகர காவல்த்துறையின் புதிய ஆணையாளராக பிரவீன்குமார் அபிநவ் இன்று பொறுப்பேற்றுக்  கொண்டார். அவருக்கு துணை ஆணையாளர்கள், உதவி ஆணையர்கள்,  காவல்நிலைய ஆய்வாளர்கள் மற்றும் ஆணையாளர் அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன்குமார் அபிநவ், சேலம் மாநகரில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். மேலும் குற்ற சம்பவங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களுக்கு முக்கியத்துவம்  அளிக்கப்படும். தடைச் செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை பாயும். 

பொதுமக்களுக்கு நல்ல சேவை செய்வது காவல்துறையின் கடமை அதனை நிறைவேற்றுவோம். பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கஞ்சா ஒழிப்பு போன்ற குற்றங்களைத் தடுப்போம். சட்டம் - ஒழுங்கை சிறப்பான முறையில் பராமரிப்போம். சமூக விரோத செயல்களை எந்த வடிவிலும் ஏற்றுக்கொள்ள முடியாது; சமூக விரோதச் செயல்களில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.