சேலம் அழகாபுரத்தில் அமைந்துள்ள 'RATHNA SQUARE' அமைக்கப்பட்டுள்ள 4 திரைகள் கொண்ட 'DNC' மல்டி ஸ்கிரீன் சினிமா தியேட்டர் திறப்பு விழா இன்று (ஜூலை 11) மாலை 05.30 மணிக்கு நடைபெற்றது. DNC தியேட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் டி.என்.சி. இளங்கோவன் தலைமையில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு திரையரங்கைத் திறந்து வைத்தார்.
அத்துடன், திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனையையும் தொடங்கி வைத்தார். விழாவில், தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அருள், சதாசிவம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், தி.மு.க.வின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
DNC திரையரங்கில் நாளை (ஜூலை 12) இந்தியன் 2 திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



