ட்ரெண்டிங்

சமூக ஆர்வலர் சிராஜுதீன் காலமானார்! 


சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிராஜுதீன் (வயது 45) மாரடைப்புக் காரணமாக காலமானார். 

சேலம் மாநகரத்தைச் சேர்ந்தவர் சிராஜுதீன். இவர், மாநகர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துத் தரக்கோரி பல்வேறு போராட்டங்களை நூதன முறையில் முன்னெடுத்து, மக்கள் மனதில் இடம் பிடித்தனர். 

குறிப்பாக, சிராஜுதீனின் போராட்டம் அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு சென்று, பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளும் காணப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சிராஜுதீன் தனது குடும்பத்தின் பூர்வீக தொழிலான வெள்ளிப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்த சூழலில், சமூக ஆர்வலர் சிராஜுதீனுக்கு இன்று (ஜூலை 09) மாலை 04.00 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் சிராஜுதீனை சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். சமூக ஆர்வலரின் மறைவுக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பலரும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.