ட்ரெண்டிங்

வாக்களிப்பதன் அவசியம் குறித்த மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு வாகனப் பேரணி!

மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகனப் பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (மார்ச் 28) மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி வைத்தார். 

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தங்களின் வாக்குப்பதிவினை அளித்திடும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றையதினம் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்தல் நாளன்று வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகனப் பேரணி நடத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு நாளன்று வாக்களித்துச் செல்ல ஏதுவாக சாய்தள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான நாற்காலிகளுடன் உதவியாளர் ஒருவருடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சக்கர

மேலும், பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக வாக்கு இயந்திரத்தில் சின்னம் குறித்து பார்வையற்றவர் தொட்டுப் பார்த்து உணர்ந்து கொள்ளும் பிரய்லி முறையிலான எழுத்து வடிவம் சேர்க்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் தங்களது தங்களது வாக்குகளைச் செலுத்தும் வகையில் தேவையான முன்னேற்பாடு வசதிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், வாக்காளர் பட்டியலில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் இயக்க குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத நிலையில் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இதற்கென நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 12 D விண்ணப்ப படிவத்துடன் தொடர்புடையவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்கி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று அதனை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் வாக்களிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாக்குப்பதிவிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களித்து பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.