ட்ரெண்டிங்

மாணவர்களுக்கு அட்வைஸ்....விமர்சனங்களுக்கு பதில் சொன்ன நடிகர் விஜய்! 

சென்னை திருவான்மியூரில் 2-ம் கட்டமாக நடைபெற்ற தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், 1975- க்கு முன் மாநில பட்டியலில் இருந்த கல்வியை ஒன்றிய அரசு பொதுப்பட்டியலில் சேர்த்தது. நீட் தேர்வால் குளறுபடிகள் நடந்ததாக செய்திகள் வந்ததை நாம் பார்த்தோம். 

எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற கல்லூரிகளுக்கு மட்டும் ஒன்றிய அரசு நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம். நீட் விலக்கு தொடர்பாக உடனே எதுவும் நடக்காது, அப்படியே நடந்தாலும் அதை நடக்கவிட மாட்டார்கள்; மாணவர்கள் ஜாலியாக படிக்க வேண்டும்; எந்த stress-ம் வேண்டாம். ஒன்றை இழந்துவிட்டோம் என கவலைப்பட வேண்டாம்; இழந்ததை விட மற்றொன்று சிறப்பாக கிடைக்கும். 

வாய்ப்புகள் நிறைய கொட்டிக் கிடக்கிறது; நம்பிக்கையோடு இருங்கள்; நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம் எனத் தெரிவித்துள்ளார். 

கடந்த ஜூன் 28- ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியின் போது நீட் தேர்வு குறித்து விஜய் பேசாதது சமூக வலைதளத்தில் பேசு பொருளானது. மாணவ்ர்களைப் பாதிக்கும் நீட் தேர்வு குறித்து பேசாதது ஏன்? என விஜய்யை நோக்கி கேள்விகள் முன் வைக்கப்பட்டன. நீட் தேர்வு குறித்து விஜய் பேசவில்லை என விமர்சனம் எழுந்த நிலையில், அதற்கு பதிலளிப்பது போல் விஜய் பேசியுள்ளார்.